காதலின் மீதியோ நீ-19

காதலின் மீதியோ நீ-19

காதலின் மீதியோ நீ-19

நித்ராவுக்கு அந்த வீட்டில் இருப்பது முள்மெத்தையில் படுத்திருப்பது போன்றதொரு அவஸ்தையாகத் தான் இருந்தது.

வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருக்கிறாள். வாழ்கிறாள் என்றெல்லாம் சொல்லவேக்கூடாது.

ஆயுஷ் கிளம்பி ஆபிஸிற்குச் செல்ல வந்தவன் நேராகச் சாப்பிடப்போனான்.

பூர்வி அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு ”நித்ரா எங்க நேத்து நைட்டும் சாப்பிடலையே.இப்பவும் உன்கூட வரல. எப்போதான் சாப்பிடுவா? ஏற்கனவே வந்த மூணு மாசத்துல எலும்பும் தோலுமா இருக்கா. என்னதான் நீ அவக்கூட சண்டைப்போட்டாலும் அவ உன் மனைவின்னு இல்லாமல் ஆகிடுமா? உனக்கு அவள்மேல் கோபம்னா அவளோடு நிறுத்திக்கோயேன் .இப்படியா சாப்பிடவிடாமல் பண்ணுவ?”என்று திட்டிக்கொண்டிருந்தார்.

“நேத்து அவள் சாப்பிடலையா? என்கிட்ட அதைக்கூட சொல்லாமல் என்ன பண்றா? நான் என்ன அவ்வளவு கொடூரனா? அவள்மேலுள்ளக் கோபத்தில் தான் அடிக்கிறேன். அதுக்காக இப்படியெல்லாம் பட்டினிக்கிடக்கணும்னு நினைக்கலையே!” என்று திடீரென்று கொஞ்சமே கொஞ்சம் அவள் மீது இரக்கப்பட்டவன் வேலைக்காரியை அழைத்து போய் நித்ராவை சாப்பிடக்கூப்ட்டு வா”என்று சொல்லி அனுப்பினான்.

வேலைக்காரி போய் கதவைத்தட்டி நித்ராவிடம்” ஆயுஷ் சார் கூப்பிடுறாங்க” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.

“எதுக்கு கூப்பிடுறாங்கன்னு தெரியலையே? என்று வந்தவள் அங்கு எல்லோரும் இருக்குவும் தயங்கித் தயங்கி நின்றாள்.

அவள் வந்தததும் திரும்பிப் பார்த்தவன்”வா வந்து உட்கார்ந்துச் சாப்பிடு”என்றான்.

“அவளோ இதென்ன புதுசா சாப்பிடச் சொல்லுறான்.இப்போ என்ன வில்லங்கம் காத்திருக்கோ?” என்று அமைதியாக அப்படியே நின்றிருந்தாள்.

அதைப்பார்த்தவன்”என்ன மகாராணிக்கு அழைச்சு உட்காரவைக்கணுமா என்ன?சாப்பிட வந்தால் வந்து உட்கார்ந்து கொட்டிக்கத் தெரியாதா? வா வந்து உட்காரு சாப்பிடு”என்று ஏதோ சாப்பாடே கிடைக்காத பிச்சைகாகாரியிடம் சொல்லுவது போன்று சொன்னான்.

அவளுக்கோ அவ்வளவு அவமானமாக இருந்தது.

“இல்லை பசிக்கலை” என்று அவனுக்கு மட்டும் கேட்கிறமாதிரி சொன்னாள்.

“ஏன் இவ்வளவு சாப்பாடைப் பார்த்தும் உனக்குப் பசிக்கலையா என்ன? உங்க வீட்டுல எல்லாம் இட்லி தோசைன்னு ஒரே ஓரு ஐயிட்டம்தானே சாப்பிடுவ. இங்கதான் வெரைட்டி வெரைட்டியா சாப்பாடு இருக்கே இதை சாப்பிடுறதுக்கு என்ன வந்துச்சாம்? வந்து உட்கார்ந்து சாப்பிடு”என்று ஆர்டர் போட்டான்.

இதைவிட மோசமாக யாரும் அவளைக் கேவலப்படுத்தியிருக்க முடியாது. அவள் அதையும் சிரித்த முகத்துடனே கேட்டவள் எனக்குப் பசிக்கலை என்று வேகமாகத் திரும்பி அறைக்குள் வந்துவிட்டாள்.

எல்லோரும் அவர்களையேதான் பார்த்திருந்தனர்.

நீலம் அதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் பூர்விக்கு இப்போதெல்லாம் மகன் அவளை ரொம்ப மட்டம் தட்டுறான்னு புரிஞ்சது. அவங்களுக்குள்ள ஏதோ பனிப்போர் போகுதுன்னு தெரியும், அந்தப் பிரச்சனையே கல்யாணத்துலதான் முடிஞ்சிருக்கு. அதுவும் இப்போது தொடருதுன்னு பார்க்கவும் மகன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்து வருந்தினார்.

குப்தா அதைக் கண்டுக் கொள்ளவேயில்லை ,உன் வாழ்க்கையை நீயேதானே தேடிக்கிட்ட அந்த வாழ்க்கையை வாழு.வாழ முடியலையா பிரிஞ்சிடுங்க.அடுத்த புது வாழ்க்கையைப் பாருங்க என்று அன்றைக்கே முடித்துவிட்டார்.

அதனால் இப்போது அவர்களுக்கிடையே வேற யாரும் எதுவும் பேசாது தங்களது வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருந்தனர்.

ஆயுஷ் நித்ராவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்ததுமே ரிச்சா அவளது தாய் தந்தையிடம் பேசி அங்கிருந்து கிளம்பிப் போயிட்டாள்.

இனி ஆயுஷை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று ஒரு முடிவெடுத்தே இங்கிருந்து ஜெர்மனிக்குப் போனாள்.

அன்று காலைதான் பிரீத்தாவும் தனது பிரசவத்திற்காக தாய்வீடு வருகிறாள் என்பதால்தான் சமையல் எப்போதும் இருப்பதைவிடவும் கூடுதலாக சமைத்திருந்தனர்.

அதைப்பார்த்துத்தான் ஆயுஷ் நித்ராவை அப்படிக் கேவலமாகப் பேசியது.

பூர்வி மகன் பேசியதையும் நித்ராவைக் கேவலப்படுத்தியதையும் கேட்டு வருத்தத்துடம் அவனை முறைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

இப்போது ஆயுஷுக்கும் சாப்பிட பிடிக்காமல் எழுந்துப் போய்விட்டான்.

நித்ரா அறைக்குள் போனதும் அவ்வளவு அழுகை”நான் ஏன் இங்க இருக்கேன்னு எனக்கே தெரியலையே. என் குடும்பத்துலயும் என்னைத் துரத்திவிட்டமாதிரி விட்டுட்டாங்களே! இனி நான் எங்கப்போவேன்? என்ன பண்ணுவேன்? இந்த மூணு மாசமே எனக்கு வாழ்க்கை நரகம் மாதிரி இருக்கே”என்று வெடித்து அழுதாள்.

ஆனாலும் ஆயுஷை நினைத்து கண்ணீரைத் துடைத்தவள் எழுந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

நித்ராவை ஆயுஷ் கல்யாணம் பண்ணிக்கொண்டதும் இனி டெல்லி நமக்கு வேண்டாம் என்று மோகன் இங்கிருந்து வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னைக்கே போய்விட்டான்.

அங்கு வேற ஆபிஸில் இதேபோன்று நல்ல சம்பளத்துடன் வேலையில் சேர்ந்துவிட்டான். மித்ராவும் இப்போது தான் படித்த படிப்பை வீணாக்காமல் தனக்கான ஒரு நல்லவேலையைத் தேடிக்கொண்டாள்.

எல்லோருக்குமே நித்ரா செய்த தவறை நினைத்து வருத்தம்தான்.

ஆனால் அவள் அங்கயே வாழட்டும்.அவளது வாழ்க்கையை அவளே பார்க்கட்டும் என்று நினைத்தனர்.

அவளை யாரும் வெறுக்கவில்லை. அவள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வார்கள்தான்.ஆனால் ஆயுஷ் அவளை விடமாட்டானே! அதுதான் அங்கே பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

நித்ரா இப்போது சாப்பிடவில்லை இரவிலும் சாப்பிடவில்லை என்பதால் பசியின் மயக்கத்தில் அப்படியே சோர்ந்துப்போய் கட்டிலில் படுத்திருந்தாள்.

பூர்வி எப்போதும் மருமகளைத் தனியாகப் பார்த்துக் கொள்வார் தான்.ஆனால் இன்று பிரீத்தா வந்ததால் அவளைக் கவனித்ததில் இவளை மறந்துவிட்டார்.

எப்போதும் பழங்களோ இல்லை பாலோ ஏதாவது ஒன்று அவளுக்காக வேலைக்கார்களிடம் கொடுத்து விடுவார் .அவளும் அதை சாப்பிட்டுக் கொள்வாள்.

 

ஆனால் இன்று எதுவுமே அவளுக்காக கொடுக்கவில்லை .அவர் சுத்தமாக மறந்து போயிருந்தார். மகள் கர்ப்பமாக இருக்கிறாள். பேறு காலத்திற்காக அங்கிருந்து இங்கு வந்திருக்கிறாள் என்பதும் ஓடியோடி மகளே கவனித்துக் கொண்டிருந்ததால் மருமகளே சுத்தமாக நினைக்க மறந்து விட்டார்.

இப்போது ப்ரீத்தாவோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதுதான் “என்னம்மா உன் மருமகளை நீ எங்கேயாவது அறைக்குள்ள போட்டு பாதுகாத்து வச்சிருக்கியா என்ன? கண்ணுலையே காட்டமாட்டேங்குற” என்று கேட்டதும் தான் ஞாபகத்துக்கு வந்தது.

அச்சோ அவளைப்பத்தி சுத்தமா மறந்துட்டனே என்று சொன்னவருக்குக் கொஞ்சம் முகம் வாடிவிட்டது.

“என்னாச்சும்மா அவளை பத்தி பேசும் போதே உங்க முகம் மாறிட்டே? ஏதாவது பிரச்சனையா?” என்று பிரீத்தா நேரடியாகவே கேட்டாள்.

“அதையேன் கேக்குற உங்க அண்ணனும் நித்ராவும் காதலிச்சிருக்காங்க ரிஜிஸ்டர் மேரேஜ் வேற பண்ணி இருக்காங்க. ஆனால் அந்த பொண்ணு என்ன பிரச்சனையென்று சொல்லமலயே அவனுக்கு தெரியாமல் அவங்க குடும்பத்துல பார்த்த மாப்பிள்ளைக்கு சம்மதமும் சொல்லி கல்யாணமும் ஏற்பாடு பண்ணிட்டாங்க.அது தெரிஞ்சு உங்க அண்ணன் கட்டாயத் தாலிகட்டி கூட்டிட்டு வந்துட்டான். அது அவங்களுக்கு இடையில பிரச்சனையா போய்க் கொண்டிருக்கிறது போலிருக்கு.அது இந்த குடும்பத்தில் எல்லாருக்கும் தெரியும் .ஆனாலும் அந்த பொண்ணு சாந்தமா எல்லாம் சகிச்சுக்கிட்டு போகுது. அந்த பொண்ணுமேல எந்தத் தப்பும் இருந்த மாதிரியே தெரியல உங்க அண்ண மேலயும் தப்பு இருக்கிற மாதிரி தெரியல. ஆக மொத்தம் ரெண்டு பேரோட வாழ்க்கை என்னாகப் போகுதோ? அதை நினைத்து ஒரே வேதனையா இருக்கு” என்று விஷயத்தை சொல்லி முடித்தார்.

“ஓ அப்படியா என்ற பிரீத்தா சுவாரசியமும் இன்றிதான் கேட்டாள். மித்ராவோட தங்கச்சிதான் நித்ரா என்று தெரிந்ததிலிருந்து பெரிதாக நித்ராவை பாக்கணும் பேசணும் தன் ஒரே அண்ணனுடைய மனைவி என்ற ஆசை எல்லாம் அவளுக்கு இல்லை. அண்ணா இப்படி ஒரு குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டானே என்றுதான் அவள் யோசித்தாள்.

அவளும் ஒரு காலத்தில் அந்த குடும்பத்தில் உள்ள ஒருத்தனை தான் நேசித்தாள் என்பது மறந்து விட்டாள்.

உடனே பூர்வி வேலைக்காரியிடம் நித்ராவுக்கு தேவையான சாப்பாடினை கொடுத்துவிட்டார்

எப்போதுமே மித்ரா அதை வாங்கி உடனே சாப்பிட்டு விடுவாள் ஆனால் இன்று அதை வாங்கி அப்படியே வைத்துவிட்டு தொட்டுக்கூடப் பார்க்காது மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.

தனது தங்கை பிரித்தவை பார்ப்பதற்காக சீக்கிரமாக வீடு வந்த ஆயுஷ் தங்கையைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அவளது கையை பிடித்துக் கொண்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ப்ரீத்தாவை பார்த்து மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தனர்.

இனி அவளுக்கான வளைகாப்பு பங்க்ஷன் நடத்தணும் என்று திட்டமிடப்பட்டிருந்ததால் அவளது கணவனும் இன்னும் ஒரு வாரத்தில் இங்கே வந்திடுவான்.

இப்படியாக டஎல்லாரும் சந்தோஷத்தோடனே அங்கு பேசி கொண்டிருக்க அந்த வீட்டில் வாழ வந்தவளோ பசி மயக்கத்தில் கட்டிலில் உருண்டுக் கொண்டிருந்தாள்.

ஆயுஷ் பிரீத்தவுடன் பேசிவிட்டு உள்ளே வந்தவன் கட்டிலில் படுத்திருந்த நித்ராவைப் பார்த்தான் ஒரு நொடி அப்படியே நின்று விட்டான்.

காலையில் அவளை திட்டியது ஞாபகத்திற்கு வந்தது.

அங்கே டேபிளில் சாப்பாடும் அப்படியே இருந்தது.

அதைப் பார்த்து குறைந்த கோபம் மீண்டும் கூடி விட்டது. அவளது கையை பிடித்து எழுப்பி “என்ன மகாராணி சாப்பாட்டை இங்க கொண்டு வந்த பிறகு சாப்பிட மாட்டியா எடுத்து சாப்பிடு” என்று அந்த சாப்பாட்டை எடுத்து அவள் கையில் கொடுத்து அதை அவர் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் உட்கார்ந்து அவளை வதைத்துக் கொண்டிருந்தான்.

பிரீத்தா வந்து ஒரு வாரமும் இப்படி தான் நடந்து கொண்டிருந்தது. ஆயுஷின் பேச்சிலும் நடத்தையிலும் அவளை வதைப்பதிலும் எந்த வித மாற்றமும் வரவில்லை. ஆனால் பிரீத்தா நித்ராவை நன்றாக கவனித்தாள்.

அதைவிடவும் அந்த வீட்டில் நடப்பதையும் கூர்ந்து பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

பிரீத்தா வந்த ஒரு வாரத்தில் ஒரு நான்கு ஐந்து முறை மட்டும் தான் நித்ராவை நேருக்கு நேர் சந்தித்திருப்பாள். மற்றபடி அவளை பார்ப்பது அபூர்வமாக இருந்தது. அதுவே பிரீத்தாக்கு சந்தேகத்தை கொடுத்தது.

அன்று எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிரீத்தா மெதுவாக தனது அப்பாவிடம் “டாடி உங்களுக்கு அண்ணனும் நித்ராவும் காதலிச்சது அவங்கக் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமா என்ன?”என்று யதேச்சையாகக் கேட்டாள்.

ஆயுஷ் சட்டென்று திரும்பி பிரீத்தவைப் பார்த்தான் அவளோ அப்பாவை பாரு என்று கண்ணை காண்பித்தாள்.

ஜெகநாத் சிறிது தயங்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவர்” அதெப்படி எனக்கு தெரியும். கல்யாணம் பண்ணிட்டு வந்ததே இங்க வந்த பிறகு தான் தெரியும். இவங்க ரெண்டு பேரும்தான் யாருகிட்டயும் சொல்லாமலே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிருக்காங்க.அதுக்கூட யாருக்கும் தெரியாது.உங்க அண்ணன் முழு பூசணிக்காயை சோத்துக்குள்ள மறைச்சிட்டு மொத்தமா அப்புறம் எடுத்து காண்பிச்சா எங்களுக்கு எப்படி தெரியும்?” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

அதைக் கேட்ட பிரீத்தா சத்தமாக சிரித்தாள். ஆயுஷ் மாதிரி ஒரு நல்ல புருஷன் கிடைக்க நித்ரா கொடுத்து வச்சிருக்கணும் இல்லையா டாடி. அவள் வேண்டாம்னு சொல்லிட்டு போனாலும் தேடிப்போய் நீதான் எனக்கு வேணும்னு ஒத்தைகாலில் நின்று அவளுக்குத் தாலிக்கட்டி கூட்டிட்டு வந்திருக்கானே. அவளுக்கு நல்லதொரு வாழ்க்கை கொடுத்திருக்கிறான் இல்ல டாடி. நீங்க ஒரு நல்லபையனை பெத்து வளர்த்து இருக்கீங்க .அதுக்கே உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கணும் டாடி”என்று சொல்லிவிட்டு கலகலவென்று மீண்டும் சிரித்தாள்.

ஆதைக்கேட்டு ஜெகன்னாத் குப்தாவும் கலகலவென்று சிரித்தார்.

ஆனால் ஆயுஷுக்கு எங்கோ ஏதோ நம்ம காதல் விசயத்துல தப்பு நடந்திருக்கு என்று முதன்முறையாக அப்போதான் நிதானமாக யோசிக்கத் தொடங்கினான்.